நெட்டிசன்:

ஜெயந்தன் ஜேசுதாஸ் (Jeyanthan Jesudoss ) அவர்களின் முகநூல் பதிவு:
புலிகள் தனியாக வாழ்வன, அவை இடம்சார்ந்த விலங்குகள் ஆகும். புலியின் வாழ்விட அளவு வரம்பானது முதன்மையாக இரை கிடைக்கக்கூடிய தன்மையைச் சார்ந்தது. அது பூர்வீகமானது. ஒரு பெண் புலியானது அதன் இருப்பிடமாக 20 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள இடத்தைக் கொண்டிருக்கும்.

இருப்பினும் ஆண் புலிகளின் இருப்பிடம் சற்று அதிகம். அவை 60–100 கி.மீ இடத்தில் வசிக்கின்றன. ஆண் புலிகளின் எல்லை வரம்பில் சில பெண்புலிகளின் எல்லைகளும் அடங்குகின்றன. பெரும்பாலான புலிகள் தனியாக வாழ்பவை எனினும் தன் இனத்தைவிட்டு பிரிந்து தூரம் செல்ல விரும்பாதவை.

தனிப்பட்ட புலிகள் ஒவ்வொன்றுக்கும் இடையேயான தொடர்புகள் மிகச் சிக்கலானது, இடம்சார்ந்த உரிமைகள் மற்றும் எல்லை மீறல்கள் தொடர்பாகப் புலிகள் பின்பற்றுவதற்கான எந்த “விதிகளும்” அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாகப் பெருவாரியான புலிகள் ஒன்றை ஒன்று சந்திப்பதைத் தவிர்க்கின்றன. இருப்பினும் ஆண் மற்றும் பெண் புலிகள் இரையை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கான சான்றுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக ஒரு ஆண் புலியானது தான் கொன்ற இரையை இரண்டு பெண் புலிகள் மற்றும் நான்கு குட்டிகளுடன் பகிர்வதை விலங்கியலாளர் ஜார்ஜ் ஸ்கால்லெர் பார்த்துள்ளார். பெண் புலிகள் பெரும்பாலும் ஆண்புலிகள் அதன் குட்டிகளின் அருகில் இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் ஸ்கால்லெர் இந்தப் பெண்புலிகள் தனது குட்டிகளை ஆண் புலிகளிடமிருந்து காப்பதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதைக் கண்டு அது குட்டிகளுக்குத் தந்தையாக இருக்கலாம் எனக் கருதுகிறார்.

சிங்கங்ளைப் போலல்லாமல் ஆண் புலிகள், பெண் புலிகளும் தான் கொன்றுவந்த இரையை முதலில் குட்டிகள் உண்ண அனுமதிக்கின்றன. வேட்டையாடி இறைதேடமுடியாத புலிகளுக்கும் அவை கருணை காட்டுகின்றன. மேலும் புலிகள் கொன்ற இரையைப் பகிரும்போது நெருக்கமாகவும் இணக்கமாகவும் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது. மாறாகச் சிங்கங்கள் அந்த நேரத்தில் சின்னத்தனமான சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும்.

(ஸ்டீபன் மில்ஸின் புலி என்ற புத்தகத்திலிருந்து…)