ரியாத்

வுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பட்டத்து இளவரசராக தனது 31 வயது மகன் முகமது பின் சல்மான் பெயரை அறிவித்தார்.

சவுதியின் மன்னர் சல்மான் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரச பதவி ஏற்றார்.  அதுவரை அவர் மகன் முகமது சவுதிக்கு வெளியில் சிறிதும் பிரபலம் இல்லாமல் இருந்தார்.   அதன் பின் சவுதியின் பொருளாதார கவுன்சிலின் தலைவர் ஆனார்.  அவர் ஏமனில் நடந்த போரில் சவுதியின் சார்பில் முக்கிய பொறுப்பு வகித்தார்.

அரசுத் தகவலின் படி அவர் பட்டத்து இளவரசர் பொறுப்போடு துணை பிரதமர் மற்றும், ராணுவ தலைமை நிர்வாகியாகவும் விளங்குவார் எனத் தெரிகிறது.  மெக்காவில் மக்கள் முன்னிலையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது