ஐபிஎல் 2018 : கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி வெற்றி

மொகாலி

நேற்று நடந்த ஐபிஎல் 2018 லீக் போட்டியில் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வென்றுள்ளது.

நேற்று ஐபிஎல் 2018 லீக் போட்டியில் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.    பஞ்சாப் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.   பஞ்சாப் அணியின் கிரிஸ் கேல் இந்த தொடரின் முதல் சதம் அடித்தார்.   விறு விறு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புடன் 193 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து வெற்றி இலக்காக 194 ரன்களுடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது.   ஐதராபாத் அணி வீரர்களும் விறுவிறுப்பாக ஆடினர்.   ஆயினும் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே ஐதராபாத் அணியால் எடுக்க முடிந்தது.    இதை ஒட்டி பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.