IPL 2016 இன்று மொகாலியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ அணிக்கும் இடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற டோனி முதலில் பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்தார்.
images (4)புனேவின் தொடக்க வீரரான ரஹானே அதிக ரன் எடுக்காமல் சந்தீப் சர்மா பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். புனேவிற்கு ஸ்டிவ் ஸ்மித் மற்றும் டுப்லேசி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணியின் மோஹித் ஷர்மா தனது சிறப்பான பந்துவீச்சில் டுப்லேசி மற்றும் தோனியை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் செய்தார் .
images (3)பஞ்சாப் அணியின் விஜய் மற்றும் வோரா தொடக்க ஆட்டக்காரர்கள் அபாரமாக பேட்டிங் செய்தனர். கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இந்த ஜோடியின் ஆட்டம் அடித்தளமாக அமைந்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். இறுதி ஓவர்களில் மாக்ஸ்வெலின் அதிரடி ஆட்டம் மூலம் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இந்த வருட IPL லின் முதல் வெற்றியை எட்டினர்.
ஸ்கோர் விவரம்
புனே சூப்பர் ஜெயன்ட்ஸ 152/7 (டுப்லேசி 67, ஸ்மித் 38, மோஹித் சர்மா 3/23, சந்தீப் சர்மா 2/23) கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் 153/4 ( விஜய் 53, வோரா 51, மாக்ஸ்வெல் 32, முருகன் அஸ்வின் 3/36)