விளையாட்டால் வினையாற்றிய அஸ்வின் – பஞ்சாப் அணியில் நீடிப்பார்?

மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து டெல்லி கேபிஸ்டல்ஸ் அணிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கிங்ஸ் லெவன் அணி நிர்வாகத்தை, அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளார்.

“அஸ்வினை அணியிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாத ஒருவராக, கிங்ஸ் லெவன் வாரியத்தினர் மறுபரிசீலனை செய்து உணர்ந்து விட்டனர். டெல்லி கேபிடல் அணியுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும் அது கனியாமல் போனது. அவர் விளையாடும் ஆட்டமே அவருக்காக பேசுகிறது“ , என்று அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா கூறியுள்ளார்.

அஸ்வின், மீண்டும் அணிக்குத் திரும்பியதில் இருந்து தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள தென்னாப்பிரிக்கத் தொடரில் ஒரு நட்சத்திர அந்தஸ்தில் உள்ளார். அத்துடன் புதிதாக நியமிக்கப்பட்ட அணியின் முதன்மைப் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேயின் பங்கும், அஸ்வின் குறித்த மறுபரிசீலனையில் உண்டென்று கூறப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே வருகின்ற போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையிலான ஐந்து ஐபிஎல் தொடர்களில் இவர் அவர்களின் 5வது தலைமைப் பயிற்சியாளராவார்.