புதுச்சேரி : ஹெல்மெட் அணியாதவர்களை சாலையில் தடுத்து நிறுத்திய கிரன் பேடி

புதுச்சேரி

இன்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகி உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் இன்று முதல் இரு சக்கரவாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.   போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய சாலைகளில் மைக்குகள் மூலம் ஹெல்மெட்டின அவசியம் குறித்து கூறி வந்தனர்.

இன்று காலை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பல முக்கிய சாலைகளுக்கு சென்று ஹெல்மெட் அணிவதைக் குறித்து பார்வை இட்டார்.   அப்போது அந்த சலைகளின் சென்ற ஹெல்மெட் அணியாதவர்களை அவர் தடுத்து நிறுத்தினார்.  அத்துடன் அவர்களை ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.

இரு சக்கர வாகனங்களில் மூவர் செல்வதையும் ஆட்டோ ரிக்‌ஷாக்களில் அதிகம் பேர் செல்வதையும் கண்ட கிரண் பேடி அவர்களை சாலையினுள் ஓடிச் சென்று தடுத்தார்.  அவ்வாறு செய்யக்கூடாது என வலியுறுத்தி கூடுதலாக இருந்தவர்களை இறங்க வைத்துள்ளார்.