Random image

காங்கிரசில் மீண்டும் இணையும் முன்னாள் ஆந்திர முதல்வர்

டில்லி

ருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மீண்டும் காங்கிரசில் இணைகிறார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்  இரண்டாக பிரிக்கப்பட்டது.  ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கிரண் குமார் ரெட்டி பதவி வகித்து வந்தார்.   நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கடந்த 2014 ஆம் வருடம் கட்சியில் இருந்து விலகினார்.

கிரண் குமார் ரெட்டி அதன் பிறகு ஜெய் சமைக்யாந்திர கட்சி என்னும் புதிய கட்சியை தொடங்கினார்.   தற்போது இவர் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணையப்போகும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இவர் வரும் 13 ஆம் தேதி அன்று டில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தனது கட்சி உறுப்பினர்களுடன் காங்கிரஸில் இணைகிறார்.

இவர் இவ்வாறு இணைவது இவருடைய அரசியல் எதிரியான ஜகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் பெரும் கலக்கத்தை உள்ளாகி இருக்கிறது.