பயோகான் தலைவர் கிரன் மசூம்தாருக்கு கொரோனா…

பெங்களூரு:

யோகான் மருந்து உற்பத்தி நிறுவன தலைவர் கிரன் மசூம்தாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட பிரபல பயோடெக்னாலஜி துறையின் முன்னணி நிறுவனமான பயோகான் தலைவர் கிரன் மஜும்தாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. அதை அவர் தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும்  தடுப்பூசியை உருவாக்க விரும்பும் நிறுவனங்களில் பயோகான் நிறுவனமும் ஒன்றாகும். ஜூலை மாதம், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டி.சி.ஜி.ஐ), மறுஉருவாக்கப்பட்ட ஊசி ஒன்றை விற்பனை செய்ய அனுமதித்தது, இடோலிசுமாப், இது நீண்டகால பிளேக் தடிப்புத் தோல் அழற்சியின் சிகிச்சைக்காக 2013 இல் முதலில் தொடங்கப்பட்டது.

அல்சுமாப் என்ற  மருந்து ஏராளமான மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது . இந்த மருந்தால்,  150 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

You may have missed