உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்தார் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா!

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட இந்திய பெண்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

priyanka

உலகின் செல்வந்தர்கள், சக்திவாய்ந்த செல்வாக்கு மிகுந்த ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, அரசியல், ஊடகம், கேளிகை, கொடையாளர்கள், கொள்கை உள்ளிட்ட 6 பிரிவுகளில் 100 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளார். இவர்களை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டைன் ஸ்கார்டே 3வது இடத்தை பிடித்துள்ளார்.

girl

இவர்கள் மட்டுமின்றி, இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, கிரன் மசூம்தார் ஷா, ஷோபனா பார்தியா மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் ரோஷ்னி நாடார் 51வது இடத்திலும், கிரன் மசூம்தார் ஷா 60வது இடத்திலும், ஷோபனா பார்தியா 88வது இடத்திலும், பிரியங்கா சோப்ரா 94வது இடத்திலும் உள்ளனர்.