கிசான் பசல் ரகத் யோஜானா: பிரதமரின் காப்பீடு திட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டுவரும் ஜார்கண்ட் மாநில அரசு…

ராஞ்சி: பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம்)  திட்டத்துக்கு மாற்றாக ஜார்கண்ட் அரசு, கிசான் பசல் ரகத் யோனா என்ற பெயரில் புதிய திட்டத்தை மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம்)  என்பது ஒரு தேசம் ஒரே திட்டம் என்ற சிந்தனையின் அடிப்படையில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  . தற்போது நடைமுறையிலுள்ள தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும், மாற்றம் செய்யப்பட்ட அதன் இன்னொரு வடிவத்தையும் நீக்கிவிட்டு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

ஜார்கண்டில்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன்  தலைமையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு   மத்திய அரசின் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜானா திட்டத்திற்கு மாற்றாக, பசல் ரகத் யோஜானா எனும் புதிய பயிரி காப்பீடு திட்டத்தை மாநில திட்டமாக அறிவித்துள்ளது. இந்த திட்டம்  2020 ம் ஆண்டு டிசம்பர் 29ந்தேதி வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்த  மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இந்த திட்டம் நிலமுள்ள மற்றும் நிலமற்ற விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். மேலும் இந்த திட்டமானது மாநில விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள திட்டத்தில் காப்பீடு செய்யும் போது, விவசாயிகளுக்கான ஈட்டுத்தொகை சரிவரக் கிடைக்கவில்லை என்றும், மேலும் 2018- 2019 ம ஆண்டில் மட்டும் 12.936 இலட்சம் விண்ணப்பங்கள் காப்பீடு செய்யப்பட்டது, அதில் 0. 577 இலட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே காப்பீடு தொகை வழங்கப்பட்டது.

இதன் காரணமாக, மாநில அரசு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. எ  இந்த காப்பீடு திட்டத்தை மாநில அரசே ஏற்று விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநில விவசாயிகளின் காப்பீடு விவரங்கள் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.