கௌரி கிஷனின் ‘மறையாத கண்ணீர் இல்லை ‘ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன்.

தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகிஇருக்கும் கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் பாடல் ஆல்பம் மறையாத கண்ணீர் இல்லை. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.

தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகும் இந்த படைப்பிற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

தற்போது இந்த பாடலின் புதிய வீடியோ ஒன்று வெளியாகவுள்ளது . வரும் அக்டோபர் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு பாடல் வீடியோ வெளியாகவுள்ளது.

மாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எடவன் லிரிக்ஸ் எழுதியுள்ளார்.