வேலூர்:
போதையின் உச்சத்தில் இருந்த காதல்கள் இரண்டு போலீசாரை தாக்கியதோடு இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனையும் சூறையாடினர். பின்னர் இருவரும் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தனர்.

போதையில்அர்சணா
போதையில்அர்சணா

       வேலூர் அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது காதலி பெங்களுரை சேர்ந்த அர்ச்சனா. இருவரும் காதலர்கள். சம்பவத்தன்று விவேகானந்தனை பார்க்க அவரது காதலி வேலூர் வந்தார். இருவரும் சேர்ந்து அருகிலுள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று பட்டப்பகலிலேயே மூக்கு முட்ட குடித்தனர்.
பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக விவேகானந்தன் பைக்கை எடுக்க முயன்றார். அதை தடுத்து அவரது காதலி அர்ச்சனை பைக்கை வாங்கி ஓட்டினார். அவர் பின்னால் விவேகானந்தன் இருந்தார். போதை காரணமாக பைக் ரோட்டில் தாறுமாறாக இங்கும், அங்கும் சென்றது.
இதை பார்த்து எதிரே வந்த வாகன ஓட்டிகள் திகிலடைந்தனர். அவர்களை தட்டிக்கேட்ட டிரைவர் ஒருவரை அர்ச்சனா தாக்கினார்.
இதை கண்ட அருகிலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பெங்களுர் பைபாஸ் ரோட்டில் கால்நடை மருத்துவமனை அருகே அர்ச்சணா சென்ற பைக்கை மடக்கினர். போக்குவரத்து எஸ்.ஐ. ராம்குமார் அவர்களிடம் விசாரணை செய்தார்.
போதையில் விவேகானந்தன்
போதை விவேகானந்தன்

அப்போது, போதை தலைக்கேறிய நிலையில்  இருந்த அர்ச்சனா அவரது சட்டையை பிடித்து இழுத்து அவரின் கன்னத்திலும் பளார் என அறைந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் எஸ்.ஐ ஓடிவந்து அவர்களை தடுக்க முயன்றார். அவரிடம் திமிறிய அர்ச்சனா, அவரின் கன்னத்திலும் ஒரு அறை கொடுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அங்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூட்டம் கூடி போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதன் காரணமாக போதை காதலர்கள் இருவரையும் சக போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியோடு வேலூர் வடக்கு பகுதி காவல் நிலையம் சென்று விசாரித்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக விவேகானந்தன் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்ய முயன்றனர்.  இதை பார்தத் அர்ச்சனா கூச்சல் போட்டு ரகளை செய்துள்ளார். போலீசாரை கீழ்த்தரமாகவும் பேசியுள்ளார். கோபமடைந்த விவேகானந்தன், காவல் நிலையத்தில் இருந்த சேர்களை உடைத்து சேதப்படுத்தி ரசளையில் ஈடுபட்டு உள்ளார். தடுக்க முயன்ற  பெண் போலீஸ் எஸ்.ஐ. நிர்மலாவை கீழே பிடித்து தள்ளி விட்டனர்.
பின்னர் இருவரும் கட்டியணைத்துக்கொண்டு முத்தமழை பொரிய தொடங்கினர். பின்னர்  தன்னிலை மறந்து உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இதன் காரணமாக போலீசாருக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. இதுகுறித்து விவேகானந்தனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து, இருவரையும் கண்டித்து  அனுப்பி வைத்தனர்.
விவேகானந்தன் மீது குடிபோதையில் வண்டி ஓட்டியதாகவும், அர்ச்சனா மீது போலீசாரை தாக்கியது மற்றும் பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பையும், போலீசாருக்கு தலை குனிவையும்  ஏற்படுத்தி உள்ளது.