வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் 5 லட்ச ரூபாய் நிதி….!

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 3 வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது. பழனிக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர்.

பழனியின் உடல் நாளை (ஜூன் 17) காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பழனியின் மரணம் தொடர்பாக, பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தங்களுடைய ட்விட்டர் பதிவில்

ஒரு போர்வீரரின் மரணத்தை எந்த பணமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இங்கே எங்களால் செய்ய முடிந்த சிறிய உதவி.. பழனியின் தியாகத்துக்காக அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வழங்குகிறோம். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்.” என பதிவிட்டுள்ளார் .