லாக்டவுன் முடிந்ததும், ‘டாக்டர்’ பட அப்டேட்ஸ் அள்ளும் பாருங்க ; சொல்கிறது கே.ஜே.ஆர் நிறுவனம்….!

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ‘டிக்கிலோனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (மே 27) மாலை வெளியிடப்பட்டது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்ளோ ‘டாக்டர்’ வெளியீடு அப்டேட்கள் எப்போது என கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கேள்வி கேக்க ஆரம்பித்து விட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக கே.ஜே.ஆர் நிறுவனம் :-

“அப்டேட் கேட்குறது ஈஸி. கொடுக்கிறது தான் கஷ்டம். ஊரடங்கு முடிந்து, ‘டாக்டர்’ படத்தின் பணிகள் மற்றும் ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்க காத்திருக்கிறோம். லாக்டவுன் முடிந்ததும், அப்டேட்ஸ் அள்ளும் பாருங்க” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .