க/பெ ரணசிங்கம் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் பாஜகவில் இணைந்தார் …..!

கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது

சமீபத்தில் கூட நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் கேஜேஆர் ஸ்டூடியோ உரிமையாளருமான ராஜேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம்’ உள்பட ஒருசில திரைப்படங்களை இவர் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.