திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வரும் 20ந்தேதி 2வது முறையாக முதல்வராக பதவி எற்க உள்ள பினராயி தலைமையிலான 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இது மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது. புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இடது ஜனநாயக முன்னணியின் அமைச்சரவை குறித்து ஆலோசனைக் கூட்டம்  நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் கன்வீனர்  விஜயராகவன்,  மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை இடம்பெறும்  என்றும்  கொரோனா சூழல் காரணமாக குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையுடன் மே 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, இன்று பினராயி தலைமையிலான அமைச்சசரவையில் இடம்பெறுபவர்கள் யார் என்பது குறித்த 12 பேர் கொண்ட பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றிய அமைச்சர்  ஷைலஜா பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், ,அமைச்சரவையில் ஷைலஜாவுக்கு இந்த முறை இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். முதல்வருடன், 21 அமைச்சா்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா். திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டு அரங்கில் மாலை 3.30 மணி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் சுமாா் 50 ஆயிரம் போ் அமரக் கூடிய விளையாட்டு அரங்கில் 500 முக்கிய வரவேற்பாளா்கள் மட்டும் பங்கேற்பாா்கள் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.,