நடன குடும்பத்தில் பிறந்து மறைந்த பிரபல நடன இயக்குநர் ரகுராம் அவர்களின் உதவியாளராக தனது பயணத்தை 1982ம் ஆண்டு தொடங்கியவர் கலா மாஸ்டர் .

இதுவரை இந்திய மொழிகள் அனைத்திலும் சுமார் 4000 பாடல்களுக்கு மேல் பணியாற்றி தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மட்டும் இல்லாமல் ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலி மற்றும் ஜாப்பனீஸ் மொழிகளில் கூட இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கலா மாஸ்டர் தற்போது “கலா Flix” என்ற தன்னுடைய புதிய youtube சேனல் ஒன்றை இன்று மாலை துவங்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு குஷ்பூ உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துக்களை பதித்து வருகின்றனர் .