ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வெற்றி

KKR  defeated Daredevils by four wickets

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 39 ரன்கள் குவித்தார். கொலகத்தா அணியில் நைல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

பின்னர் 169 எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கொல்கத்தா அணியில் துவக்க வீரர்கள் ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய யூசுப் பதான் – மனிஷ்பாண்டே இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 19.5 ஓவரில் அந்த அணி 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே (69), யூசுப்பதான் (59) ரன்கள் குவித்தனர்.