அணிக்கு கடைசி இடம்தான்! – ஆனால் அந்த விஷயத்தில் ராகுல்தான் டாப்..!

துபாய்: நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்று, புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி கடைசி இடத்தில் இருந்தாலும், தற்போதைய நிலையில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் அந்த அணியின் வீரர்களே உள்ளனர்.

இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 387 ரன்களுடன் முதலிடத்திலும், அந்த அணியின் மற்றொரு வீரர் மயங்க் அகர்வால் 337 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

சென்னை அணியின் பாஃப் டூ பிளசிஸ் 307 ரன்களுடன் மூன்றாமிடத்திலும், ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் 284 ரன்களுடன் நான்காமிடத்திலும் உள்ளனர்.

மேலும், ஐதராபாத் அணியைச் சேர்ந்த ஜான்னி பேர்ஸ்டோ 280 ரன்களை அடித்து ஐந்தாமிடத்தில் உள்ளார்.