ஐபிஎல் தொடரில் விரைவு 2000 ரன்கள் – பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் சாதனை!

துபாய்: ஐபிஎல் தொடரில் விரைவாக 2000 ரன்களைக் கடந்து, இந்திய அளவில் புதிய சாதனையைப் படைத்துள்ளார் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல்.

ஐபிஎல் தொடரில் விரைவாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை, இந்தியளவில் வைத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார் கேஎல் ராகுல்.

தற்போது பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் போட்டியில் இந்த சாதனையை செய்துள்ளார் ராகுல். இதன்மூலம் உலகளவில், கிறிஸ்கெயில் மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோருக்கு அடுத்து, ஐபிஎல் தொடரில் விரைவாக 2000 ரன்களைக் கடந்த வீரராக உருவெடுத்துள்ளார் ராகுல். மேலும், இந்தியளவில் முதல் வீரராகவும் மாறியுள்ளார்.