13வது ஐபிஎல் தொடர் – தற்போதைய பெரிய ரன் எது தெரியுமா?

தற்போதைய நிலையில், 13வது ஐபிஎல் சீசனில், பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அடித்த 132 ரன்கள்தான், ஒரு போட்டியின் பெரிய ஸ்கோர் என்ற அந்தஸ்தில் உள்ளது.

கேஎல் ராகுல் வெறும் 69 பந்துகளில் 132 ரன்களை அடித்துள்ளார். இரண்டாமிடத்தில் இருப்பவர் அதே அணியின் மயங்க் அகர்வால். அவர் 50 பந்துகளில் 106 ரன்களை அடித்துள்ளார்.

இதுவரையான லீக் போட்டிகளில், பஞ்சாப் அணியின் இந்த இரண்டு வீரர்கள்தான் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, மும்பை அணியின் இஷான் கிஷான் 58 பந்துகளில் 99 ரன்களை அடித்து மூன்றாமிடத்திலும், ஐதராபாத் அணியின் பேர்ஸ்டோ 55 பந்துகளில் 97 ரன்களை அடித்து நான்காமிடத்திலும், பெங்களூரு கேப்டன் விராத் கோலி 52 பந்துகளில் 90 ரன்களை அடித்து ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.