திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமனம்

சென்னை

திமுத தலைமைக் கழக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக முன்னணி பிரமுகர்களில் ஒருவரான கே என் நேரு தமிழக அமைச்சரவையில் மூன்று முறை அமிஅசராக பதவி வகித்துள்ளார்.   இவர் போக்குவரத்துத் துறை,  உணவுத்துறை மற்றும் மின்சாரத் துறையில் அமைச்சராக பணி புரிந்துள்ளார்.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கே என் நேரு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர் திமுக உயர் மட்டக்குழு உறுப்பினராக உள்ளார்.

நேற்று திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், “தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் திரு டி ஆர் பாலு எம் பி அவர்கள் கழக நாடாளுமன்ற தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு பதிலாக திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராக திரு.  கே என் நேரு எம் எல் ஏ அவர்கள்  தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி