சத்தியமூர்த்தி ஒய்வு: தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்…

சென்னை:

மிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், புதிய உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூத்தியை தமிழ்நாடு அரசு நியமித்து உள்ளது.

தமிழகத்தில், உளவுத்துறை ஐஜி  சத்தியமூர்திதி மற்றும் மாநில மனித உரிமைகள் டிஜிபி ஸ்ரீலட்சுமி பிரசாத், காவலர் நலன் கூடுதல் டிஜிபி சேஷசாயி ஆகியோர்  இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பதில் புதிய அதிகாரிகளை நியமனம் செய்வது குறித்து தமிழகஅரசு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், புதிய உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்-ஐ தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இவர்,  மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்தார். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதும்,  திருச்சி ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி உளவுப்பிரிவு தலைவராக ஐஜியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு மேல் அதிகாரி யாரும் நியமிக்கப்படாத சூழலில் கடந்த 4 ஆண்டுகளாக சத்தியமூர்த்தி உளவுப்பிரிவு பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.