நாக் அவுட் சுற்று: ”குரோஷியாவிற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல” – டென்மார்க்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றின் இரண்டாவது நாளில் இரவு 11.30 மணிக்கு குரோஷியா மற்றும் டென்மார்க் அணிகள் மோத உள்ளன. ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நோவ்கரோட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. குரூப் டி பிரிவில் இடம்பெற்ற குரோஷியா அணி லீக் சுற்றில் விளையாடிய போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றது. லீக் சுற்றில் ஏழு கோல்களை அடித்திருந்த குரோஷியா அணி 9 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
Croatia
பலம் வாய்ந்த அர்ஜெண்டினா, ஐயர்லாந்து, நைஜீரியா அணிகளை சாய்த்து குரோஷியா அணி தனது பலத்தை நிரூபித்தது. மெஸ்ஸி இடம்பெற்றிருந்த அர்ஜெண்டினா அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்ப்பார்த்து இருந்த நிலையில் சனிக்கிழமை அர்ஜெண்டினாவுடன் குரோஷியா மோதியது. இந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்ற குரோஷியா உலக கோப்பை போட்டியில் இருந்து அர்ஜெண்டினாவை வெளியேற்றியது.

இதேபோன்று டென்மார்க் அணி தான் 3 விளையாடிய போட்டிகளில் ஒரு வெற்றியையும், 2 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது. லீக் சுற்றில் 2 கோல்களை மட்டுமே எடுத்திருந்த டென்மார்க் அணி 5 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
denmark
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இரு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க உள்ளன. டென்மார்க்கை காட்டிலும் குரோஷியா அணி சற்று மேலோங்கி காணப்படுவதால் இது அவர்களுக்கு சவாலான ஒரு போட்டியாகவே அமையும்.குரோஷியா அணியின் கேப்டனான லூகா எதிரணியின் வீரர்களை மைதானத்தில் மிரட்டுபவராக உள்ளார். அதேபோல் டென்மார்க அணி மிஸ்பீல்டர் கிறிஸ்டியன் எரிக்சனை நம்பி களத்தில் இறங்க உள்ளது. எரிக்சனின் புயல் வேகத்தில் கால்பந்தை சக வீரர்களுக்கு கடத்துவது எதிரணியினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

டென்மார்க் அணியின் எரிக்சன் கூறும்போது “ எதிரணியை சேர்ந்த மோட்ரிக் சிறந்த வீரர். அவரை கையாள எங்களுக்கு தெரியும். ரியல் மாட்ரிகாக அவர் விளையாடும் போது பார்த்துள்ளோன். கிளப்பிற்காக ஆடும்போதே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தற்போது நாட்டிற்காக ஆடும் போது அவரது ஆட்டத்தில் அனல் பறக்கும். எனினும் நாங்கள் குரோஷியா வீரர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை ” என்று கூறினார்.

இந்நிலையில் குரோஷியா மற்றும் டென்மார்க அணிகள் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் இரண்டு முறை மோதியுள்ளனர். இதில் ஒருமுறை டென்மார்க்(1-0) அணியும், ஒருமுறை குரோஷியா (2-0) அணியும் வெற்றிப்பெற்றது.