கோப் பிரையன்ட் மரணம் குறித்து 2012ம் ஆண்டே பதிவிடப்பட்ட வைரல் டிவிட் – வீடியோ….

வாஷிங்டன்:

லைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விமான விபத்தில் காலமானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவேகோப் பிரையன்ட் விமான விபத்தில் பலியாவார் என நோஸோ (NOSO) என்பவர் கடந்த 2012ம் ஆண்டே,  பதிவிட்ட டிவிட் பதிவு வைரலாகி வருகிறது.

பிரபல கூடைப்பந்து ஜாம்பவான் கலிபோர்னியாவின் கலாபாசஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். தனது 13வயது மகள்கனான  கியானா மரியா-ஓனோர் பிரையன்ட்  ஆகியோருடன் ஹெலிகாப்டரில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளனதில் மரணமடைந்தனர். இவர்களின் மறைவுக்கு உலக தலைவர்கள் உள்பட விளையாட்டு வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோபியின் மரணத்தை முன்னரே தெரிவித்து கடந்த 2012ம் ஆண்டு பதிவிடப்பட்ட டிவிட் தற்போது வைரலாகி வருகிறது.

கோபி பிரையன்ட்டின் ஹெலிகாப்டர் விபத்தை முன்னறிவிக்கும் NOSO என்பவரின் 2012 ஆம் ஆண்டின் டிவிட் வைரலாகி வருகிறது, இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது NOSO என்பவரின் டிவிட் உறுதியான நிலையில், அவர் யார், அவர் எவ்வாறு கணித்தார் என்று கேள்வி எழுந்துள்ளதுடன், அந்த டிவிட்டும் வைரலாகி  சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.