கோச்சடையான் வழக்கு: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் குட்டு

டில்லி:

கோச்சடையான் பண விவகாரம் தொடர்பான வழக்கில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி  லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆட் பிரோ நிறுவனத்திற்கு தரவேண்டிய 6.2 கோடி ரூபாய் நிலுவை  தொகையை திருப்பி தர மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று  லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தன் கடன் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் பல முறை உத்தரவிட்டும், கடன் பாக்கியை செலுத்தாத படத்தயாரிப்பாளரான லதா ரஜினி காந்துக்கு இன்று மீண்டும்  உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கடந்த 3ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் லதாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த நிலையில், இன்றைய விசாரணையின்போது மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆட் பிரோ நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 6.2 கோடி ரூபாய் நிலுவை  தொகையை திருப்பி தராவிட்டால்,  வழக்கை மீண்டும் எதிர்கொள்ள வேண்டும் என்று  லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

உச்சநீதி மன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் எதற்கும் அசைந்து கொடுக்காமல் சட்டத்தை மதிக்காமல் செயல் பட்டு வருவது பொதுமக்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை உருவாகி வருகிறது.

ஏற்கனவே, லதா ரஜினிகாந்த் சென்னை ஆள்வார்பேட்டையில்  தான் நடத்தி வந்த கடைக்கு வாடகை பாக்கி கொடுக்காமல் தமிழக அரசை ஏமாற்றி வந்த நிலையில்,  அது தொடர்பாக  கோர்ட்டு தலையிட்டு காலை காலி செய்யும்படி அதிரடி உத்தவிட்ட நிலையில், மாநகராட்சி மீதே வழக்கு தொடர்ந்து பரபரப்பு ஏற்படுத்தியவர் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.