‘சாம்பியன் ஆப் எர்த்’: ஐ.நா.வின் மிக உயரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது பெறும் கொச்சி விமான நிலையம்

கொச்சி:‘

‘சாம்பியன் ஆப் எர்த்’  என்ற மிக உயரிய விருதை கொச்சி விமான நிலையத்துக்கு  ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் 100 சதவிகிதம் சோலார் பவர் மூலம் இயங்கி  வருகிறது. இதன் காரணமாக அந்த விமான நிலையத்திற்கு ஐ.நா. வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்குவதாக அறிவித்து உள்ளது.

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் சோலார் மின்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொச்சி விமான நிலையம், பொது மற்றம்  தனியார் துறையின் கீழ் கட்டப்பட்ட நாட்டின் முதல் விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு 12 மெகாவாட் அளவிலான மின் உற்பத்திக்கு தேவையானசோலார் தகடுகள் பொருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது ,  தற்போது 30 மெகாவாட் வரை உயர்த்தப்பட்டு 100 சதவிகிதம் சோலார் மின் பவரையே உபயோகிக்கும் விமான நிலையமாக மாறி உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், அனைத்து விதமான சேவைகளும்  சோலார் பவர் சிஸ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக  ஆண்டு ஒன்றுக்கு ரூ.40 கோடி ரூபாய்  அளவில் சேமிக்கப்படுவதாக கூறப்படு கிறது.

இதன் காரணமாக, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு, மிக உயர்ந்த விருதான  ‘சாம்பியன் ஆப் எர்த்’  என்ற விருதை கொச்சி விமான நிலையத்துக்கு அறிவித்து உள்ளது.

ஐ.நா.வின்  உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக இயக்குன ரான எரிக் சொல்ஹெய்ம் இதை அறிவித்து உள்ளார். அதில்,  “இது ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் ஊக்குவிப்புக்கான விருது”  என்று கூறி உள்ளார்.

இந்த விருது வரும் செம்பம்பர் மாதம் 26ந்தேதி  நியூயார்க் நகரில் நடைபெறும் கண்கவர்   நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐ.நா.வின்ன் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹைம் தலைமையிலான குழுவினர் கொச்சி விமான நிலையத்தை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து கேரள முதல்வர் பிரனாயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் தற்போது கொச்சி விமான நிலையத்திற்கு மிக உயர்ந்த விருதான சாம்பியன் ஆப் எர்த் என்ற விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.