வெள்ள நிவாரண நிதிக்காக கேரள முதல்வரிடம் தனது கம்மலை கழற்றிக் கொடுத்த சிறுமி! நெகிழ்ச்சி சம்பவம்

கொச்சி:

டுமையான வெள்ளப்பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தில், வெள்ள நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர், மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தனது காதில் அணிந்திருந்த கம்மலை யும், தான் சேமித்து வைத்திருந்த சேமிப்பையும் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த சிறுமியை கேரள முதல்வர் வெகுவாக பாராட்டினார். மேலும், சமுக வலைதளங்களில் அந்தச் சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சமீபத்தில், மலையாள திரைப்பட நடிகையும், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற வருமான சரண்யா தனது புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக அளித்து நெகிழ்ச்சியடையச் செய்திருந்த நிலையில், தற்போது சிறுமியின் வெள்ள நிவாரணம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெய்து வந்த கனமழை வெள்ளத்தின் காரணமாக அம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முதல்வர்  நிவாரண நிதி கோரியுள்ளார். அதைத் தொடர்ந்து ஏராளமானோர், வெள்ள நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் தங்கள் பங்கிற்கு நிவாரண உதவிகளை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் கொச்சி அருகே ஆலுவா பகுதிசை சேர்ந்த லியானா தேஜஸ் என்ற 4ம் வகுப்பு மாணவி, வெள்ளநிவாரணத்திற்காக தான் அணிந்திருந்த தங்க காதணிகள், மற்றும் தனது பிங்கி பாங்க் உண்டியல் சேமிப்பு ஆகியவற்றை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்தார்.

லியானா தேஜஸ் ஆலுவாவில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் உயர்நிலைப் பள்ளியின் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று  எர்ணாகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டுவிட்டு காரில் ஏறச் சென்றால். அப்போது,  அவரை  சந்தித்து தனது உண்டியல் சேமிப்பை கொடுத்த நிலையில், திடீரென தனது   தங்கக் காதணிகளையும் கழற்றி முதல்வரிடம் ஒப்படைத்தார்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.  அதில், சிறுமி இதைச் செய்ததைப்  பார்த்தால் உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது என்று  தெரிவித்து உள்ளார். மேலும், தான்  சிபிஐ (எம்) மூத்த எம்.எம். லாரன்ஸின் 90 வது பிறந்தநாளில் கலந்து கொண்டு நான் திரும்பி வரவிருந்தபோது அந்த சிறுமி என்னை நோக்கி ஓடி வந்தாள். அவள் உண்டியலில் இருந்த வங்கி சேமிப்பை என்னிடம் ஒப்படைத்தாள். நான் வெளியேறவிருந்தபோது, ​​அவள் ‘இதுவும்’ என்று கூறி, அவள் அணிந்திருந்த காதணியை அகற்றி எனக்குக் கொடுத்தாள், ” என்று பினராயி விஜயன்  பதிவிட்டு உள்ளார்.

அத்துடன்,  சிறுமி லியானாவின் இந்த செயலுக்கு எந்தவிதமான பாராட்டுகளும் போதுமானதாக இருக்காது. அவரைப் போன்ற குழந்தைகளைப் பார்ப்பது ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம், எங்கள் குழந்தைகள் புதிய கேரளாவின் சொத்துக்கள், ”என் பதிவிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.