கொச்சி மெட்ரோ ரெயில் தொழிலாளர்களுக்கு விருந்து

கொச்சி

மெட்ரோ ரெயில் வேலைகள் முடிவுறப் போவதையொட்டி, 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பாரம்பரிய விருந்து கொடுத்து நிர்வாகம் அசத்தியது.

கொச்சி மெட்ரோ நிர்வாகம் சத்யா எனப்படும் கேரளாவின் பாரம்பரிய விருந்தை கொடுத்து தன் தொழிலாளர்களை கவுரவித்தது.

சத்யா என்பது வாழையிலையில் அனத்து வகை உணவையும் பரிமாறி விருந்தளிப்பது.

இந்த விருந்தில் நிர்வாக இயக்குனர் இலியாஸ் ஜார்ஜ் உட்பட அனைத்து ஊழியர்களும் சமபந்தியில் உணவருந்தினார்கள்.

வடநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிவதால் அந்த தொழிலாளர்கள் இந்தித் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.

அந்த தொழிலாளர்கள் தங்கள் பெயரையும் கையெழுத்தையும் போர்டில் பதிந்தனர்.

இந்த மெட்ரோ ரெயில் ஓட இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இதில் பணி புரிய திருநங்கைகள் சிலரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஓட்டுனர்கள் உட்பட பல பணிகளில் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.