கொடைக்கானல்: சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து திமுக பிரமுகர் உள்பட 3 பேர் பலி

மதுரை:

கொடைக்கானல் அருகே  சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. பிரமுகர் உடல் கருகி  உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல் அருகே உள்ள  கீழ்மலை பகுதியில் மங்களம்கொம்பு கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். திமுக கட்சியை சேர்ந்தவரான இவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் ஆவார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், விஷ்ணுபிரியா என்ற 10வயது மகளும் உள்ளனர்.

இவர்கள் வசிக்கும் பகுதி மலைப்பகுதி என்பதால் காட்டு விலங்குகள் மற்றும் யானைகளிடம் இருந்து தம்பிக்கும் வகையில்,  இவர்களது வீடு  தகரத்தால் அமைக்கப்பட்டு, அதைச்சுற்றி மரக்கட்டைகளை கொண்டு அடைக்கப்பட்டு பாதுகாப்பாக அரைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை கணேசனின் மனைவி காபி போடுவதற்காக சமையலறை சென்று கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்துவீடு முழுவதும் தீப்பிரவியது.

இந்த தீயில் சிக்கி கணேசன், மஞ்சுளா அவரது மகள் விஷ்ணுபிரியா ஆகியோர் பலியாகினர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயில் கருகி இறந்த 3 பேரின் உடலையும் மீடு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு நேரத்தில் கேஸ் சிலிண்டர் சரியாக அடைக்கப்படாமல், கேஸ் லீக்காகி இருந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.