கொடைக்கானல்,

கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலையில் திடீர் பிளவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலைகளின் இளவரசி கொடைக்கானல் என்று அழைக்கப்படுவதுண்டு. சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் உள்ள ரோடு ஒன்றில் திடீரென பிளவு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது கொடைக்கானல். எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை “மலைகளின் இளவரசி” என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.

தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.

கொடைக்கானல் முக்கிய சாலையான  டெப்போ கான்வென்ட் சாலையில் இரந்து நாயுடுபுரம் செல்லும் சாலையின் நடுவே திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சாலை சரியாக பராமரிக்கப்படாது குறித்து, நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கியமான இந்த சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது, கோடைகாலம் தொடங்கியுள்ளதால், கொடைக்கானலை நோக்கி,  அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவி்கள் மற்றும்  வெளி மாநில சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலுக்கு வருகை தர ஆரம்பிப்பார்கள்.

அதிகாரிகள் உடடினயாக நடவடிக்கை எடுத்து சாலைப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலாபயணிகள் எதிர்பார்க்கிறார்கள்…