கொடநாடு சர்ச்சை: இன்று ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை:

கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது பூதாகரமாக புகார் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழகஆளுநரை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று  சந்தித்து வலியுறுத்துகிறார்.

இன்று மாலை  5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கும்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரம் தொடர்பாக விசா ரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், தெஹல்கா புலனாய்வு பத்திரிகையனி முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் எடப்பாடிக்கு பங்குண்டு என்று அதிர்ச்சிகரமான வீடியோவை கடந்த வாரம் வெளியிட்டார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொடி விவகாரம் குறித்த பிரச்சினையை  ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் கவனத்துக்கு தி.மு.க. கொண்டு செல்ல இருக்கிறது. இன்று தமிழக கவர்னரிடம் புகார் மனு அளிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று  மாலை 5.30 மணிக்கு ஸ்டாலினுக்கு கவர்னர் மாளிகை  நேரம் ஒதுக்கி உள்ளது.

இதையடுத்து மாலை 5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார்.