கொடநாடு எஸ்டேட்டை மீட்பேன் – முன்னாள் ஓனர் பீட்டர் 

சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கார்ல் எட்வர்டு தன்னுடைய எஸ்டேட்டை மீட்டுவிடும் நம்பிக்கையை முற்றிலும் இழக்காமல் உள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இதனை பீட்டர் கார்ல் எட்வர்டு என்பவரிடம் இருந்து சசிகலா மிரட்டி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் மரண விசாரணக் கமிஷன் முன்பு ஆஜராக இன்று சென்னை வந்திருந்தார் பீட்டர்.

 

அவரிடம், விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜாராக வேண்டியதன் அவசியம் என்ன என்று கேட்டபோது பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பு கமிஷன் முன்பு ஆஜராக சொன்னார்கள். நான், எனது எஸ்டேட் சொத்து  தொடர்பான  கேள்விகள் இருக்கும் என நினைத்தேன். அனால், அவர்கள் என்னிடம் ஜெயலலிதா சிகிச்சை பற்றிய கேள்விகளைக் கேட்டார்கள். எனக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள் என்பதால் பதில் அளிக்க இயலவில்லை என்றார்.

சசிகலா உங்கள் சொத்தை மிரட்டி வாங்கியதாகக் கூறினீர்களே என்றதற்கு ளு’’நான் சசிகலா என்னிடம் நேரடியாகப் பேசவில்லை. அவரின் பினாமியாக செயல்பட்ட உடையார் தான் என்னிடம் எஸ்டேட்டை வாங்கினார்’’ என்று கூறினார்.

உங்கள் சொத்தை மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறாதா எனக் கேட்டதற்கு, டு’’இப்போது ஜெயலலிதா சொத்து விவகாரம் அரசு மற்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விஷயமாக மாறிவிட்டது. இந்த சிக்கல் தீர பல வருடங்கள் ஆகும். இருந்தாலும் நான் அதில் எனது தரப்பைக் கூறுவேன். இப்போது அந்த எஸ்டேட் நல்லமுறையில் இருந்தால் போதும் என்கிற உணர்வுதான் உள்ளதுறு’’ என்றார்.

நன்றி:  தி வீக்