சென்னை:

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷயான் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாட் டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில், அவரது மறைவை தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது. இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இந்த வழக்கு சம்பந்தமாக 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பலர் ஜாமினில் வெளியே வந்தபோது மர்ம முறையில் மரணம் அடைந்தனர். முக்கிய குற்றவாளிகளான மனோஜ், ஷயான் ஆகியோர் ஜாமினின் வெளியேறிய நிலையில், தெஹகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலின்  கட்டுப்பாட்டில் இருந்து, முதல்வர் எடப்பாடி மீது புகார் கூறினர்.

இதையடுத்து, அவர்கள் மீதான ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், காவல் துறை யின் பரிந்துரையின் பேரில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா ஷயானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இது குறித்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி குற்ற எண் 158/17 வழக்கில் சம்பந்தப்பட்ட, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷயான்(33) கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் மீது உதகை மத்திய காவல்நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

மாவட்டக் காவல் துறை கண் காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஷயானை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியரிடம் உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, ஷயானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.