கொடநாடு கொலை: மடியில் கனமில்லை! ஓபிஎஸ் அணி ஆறுகுட்டி விளக்கம்

சென்னை,

றைந்த ஜெயலலிதாவின் கொடநாடு கொலை விசாரணைக்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆறுக்குட்டி எம்எல்ஏவை  போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

மடியில் கனமில்லை எனவே பயமில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ஆத்தூர் எம்எல்எ.

குன்னூர் அருகே உள்ள கொடநாடு பகுதியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. சம்பவத்தன்று கொள்ளையர்கள் காவலாளிகளை தாக்கிவிட்டு, எஸ்டேட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்தனர்.

இதில் காவலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் சிசிக்சை பெற்று வருகிறதார். இந்நிலையில்  கொள்ளை சம்பந்தமாக போலீசார் விசாரணையின்போது, ஜெயலலிதாவின் முன்னாள்   கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ் மர்மமான முறையில் சாலை விபத்தில் சிக்சி பலியானார்.

இதுகுறித்து விசாரணை நடத்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த  ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.விடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது எம்எல்ஏ ஆறுகுட்டியை  விசாரணைக்கு  ஆஜராகுமாறு ஆத்தூர் போலீசார் சம்மன் கொடுத்தனர். இதுழ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆத்தூர் எம்எல்ஏவான ஆறுகுட்டி கூறியதாவது,

தற்போது மர்மமான முறையில் மரணமடைந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர்  கனகராஜ் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார்

. சென்னையில் உள்ள எனது நண்பர் ஒருவரது நிறுவனத்தில் கனகராஜ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நான் சென்னை சென்ற போது எனது காரின் மாற்று டிரைவராக அவர் வந்தார். அப்போது கனகராஜ் என்னிடம் நான் ஏற்கனவே போயஸ் தோட்டத்தில் வேலை பார்த்திருக்கிறேன் என்று கூறி பழகினார்.

நான் சென்னை சென்ற போதெல்லாம் எனது காருக்கு மாற்று டிரைவராக அவர் வேலை பார்த்தார். எனது இருப்பிடத்தைப் போட்டுக்கொடுத்த கனகராஜ் அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம் நடந்த நேரத்தில் நான் இருக்கும் இடத்தை கனகராஜ் மாற்று அணியினருக்கு தெரிவித்தார்.

இதில் எனக்கு அவர் மீது வருத்தம் ஏற்பட்டது. எனவே உடனே அவரை நிறுத்தி விட்டு வேறு டிரைவரை நியமித்தேன். அதோடு கனகராஜூடனான பேச்சையும் நிறுத்தி 2 மாதங்களுக்கு மேலாகி விட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் நான் சென்னையில் இருந்த போது கனகராஜ் எனது டிரைவரிடம் பேசி கார் பழுதாகி விட்டதாக கூறி உதவி கேட்டிருக்கிறார். அதனடிப்படையில் எனது டிரைவர் உதவி செய்துள்ளார். மற்றபடி கனகராஜை பற்றி வேறு எதுவும் எனக்கு தெரியாது என்று கூறினார்.

மேலும்,  போலீசார் நேற்று இரவு தான் என்னிடம் விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்தனர். ஆனால் வரும் 17ம் தேதி மதுரை பெரியகுளத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதிருப்பதால் இன்றே விசாரணைக்கு வருகிறேன் என போலீஸ் அதிகாரிகளிடம் கூறினேன்.

அவர்களும் வாருங்கள் என கூறியதன் அடிப்படையில் சேலத்துக்குச் செல்கிறேன் என்றார்.

எனது மடியில் கனம் இல்லை. எனவே எனக்கு எந்த பயமும் இல்லை. போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.