கொடநாடு கொலை: கைது செய்யப்பட்ட சயான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோவை,

கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட சயான், நேற்று  நள்ளிரவு மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் கொடநாடு  எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு காவலாளியை கொலை செய்துவிட்டு, அங்கிருந்த ஜெயலலிதாவின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது. காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் விபத்தில் மரணம் அடைந்தை தொடர்ந்து, அடுத்த  முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் என்பவரும், கடந்த  ஏப்ரல் 30-ஆம் தேதி பாலக்காடு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.

அவருக்கு கடந்த  மாதம் 13-ம் தேதி முதல்  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்பபட்டது. அவர் குணமடைந்ததை தொடர்ந்து, நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதையடுத்து அவரை  நீலகிரி மாவட்ட போலீஸார்  கைது செய்து,

கொட எஸ்டேட்டுக்கு அழைத்து சென்றனர். இங்க அவர் போலீசாருக்கு கொள்ளை நடத்தப்பட்டது குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை சயானை  கோத்தகிரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சயானுக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டதாக கூறப்பட்டத்தை தொடர்ந்து, நேற்று நள்ளிரவில்  அவரை  மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.