கிருஷ்ணகிரி:

ந்தவாசியில் இருந்து கர்நாடகா எடுத்துச்செல்லப்படும் பிரமாண்ட ராமர் சிலை, சாலையோர கடைகளையும் வீடுகளையும் இடித்து தள்ளி விட்டு செல்லும் நிலையில், இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளை பற்றி தவறாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் நிறுவுவதற்காக, 64 அடி உயரத்தில், 230 டன் எடையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் சிலை வடிவமைக்கப்பட்டது.

இதற்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி பெற்ற நிலையில் இந்த சிலை, கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 9ம் தேதி, 240 சக்கரங்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றி பெங்களூருக்கு புறப்பட்டு கடந்த 15ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், தீவனுார் வந்தடைந்தது.

அங்கு பக்தர்கள் பிரமாண்ட கோதண்டராமர்  சிலைக்கு   கற்பூரம் ஏற்றி், துளசி மாலை அணிவித்து வணங்கினர்.  அதைத்தொடர்ந்து சிறிது சிறிதாக சாலையோர கட்டிங்களையும், கடைகளையும் உடைத்து நொறுக்கி வரும் கோதண்ட ராமர் பல இடங்களில் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் ஆளாகி வருகிறார். இந்த சிலை தற்போது கிருஷ்ணகிரி பகுதியில் சென்றுகொண்டு உள்ளது.

இந்த நிலையில், கோதண்ட ராமர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியை சேர்ந்த சிலர்,  மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில்,  விமர்சித்துப் வீடியோ வெளியிட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த மகேஷ் குமார் , சந்தோஷ் குமார் , சத்தியமூர்த்தி உள்பட  7 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.