ரம்ஜானை முன்னிட்டு மே 14 அன்று விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ்….!

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D ராஜா தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன்.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மீகா நாயகியாக நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மே 14 ரம்ஜானை முன்னிட்டு விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடியில் ஒருவன் மே 14-ம் தேதி வெளியாவதாக புதிய போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலிதா தனஞ்செயன் வெளியிட்டுள்ளார்.