விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் டீஸர் ரிலீஸ்…!

லாக்டவுனில் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் என்ற பெருமையையும் பெறுகிறார் விஜய் ஆண்டனி.

கடந்த மாதம் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் அறிவிப்பு வெளியானது. செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D ராஜா தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மீகா நாயகியாக நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.