பெரம்பூர்:

கொடுங்கையூர் டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசங்கள், சானிடைசர், சோப் மற்றும்  சாலையோர மக்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு உபகரணங்களான, முகக்கவசம் மற்றும் சானிடைசர் போன்றவை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.  இதை கருத்தில்கொண்டு டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 3000 பேருக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர், கைகழுவுவதற்கான சோப்புகள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி மாநகராட்சி அதிகாரி கலந்துகொண்டு, பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, காலை 10.30 மணி அளவில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. டீசசர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் முன்பு, சங்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி. சமூக விலகல் குறித்து எடுத்துரைத்தனர்.

பொதுமக்கள் கூட்டமாக  கூடுவதை தவிர்த்து, சமூக விலகலை கடைபிடித்து, அவர்களுக்கு பாதுகாப்பு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பின்னர், டீச்சர்ஸ்காலனியின் 10 தெருக்களுக்குக்கும் லாரி மூலம் கிருமிநாசினி தண்ணீர் கொண்டு வரப்பட்டு தெளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கொடுங்கையூர், எம்ஆர்நகர், மாதவரம் பகுதிகளில் சாலையோரம் குடியிருந்து வரும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள், முகக்கவசம், சோப்புகள் போன்றவை வழங்கப்பட்டன. சமூக விலகலை  கடைபிடிக்கும் நோக்கில்  டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தனித்தனியாக பிரிந்து சென்று நிவாரண உதவிகளை வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் அந்தோணி ராஜ் (35வது வட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர்) தலைமையில், செயலாளர் அன்சர்பாஷா, பொருளாளர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.