பிரபல போஜ்புரி சினிமா நடிகை சாலை விபத்தில் பலி!

--

போஜ்பூரி படங்களில் நடித்து வந்த பிரபல நடிகையான மணிஷாராய் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் பலியானார். அவருக்கு வயது 45. அவர் நடித்துள்ள ‘ககோபார்’  என்ற போஜ்புரி படம் மிகவும் பிரச்சித்தி பெற்றது. அந்த படத்திற்கான மணிஷா ராய் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

போஜ்புரி நடிகைகளில்,  தனக்கென ஓரு தனி அடையாளமாக வலம் வந்தவர் நடிகை மஷிஷா ராய். பலியானார்.

இவர் படத்தின் ஷூட்டிங் ஒன்றில் கலந்துகொள்ள சித்துனியா என்ற கிராமப்பகுதிக்கு தனது உதவியாளர் சஞ்சீவ் என்பவருடன் சென்றுகொண்டிருந்தபோது, கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானாதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

45 வயதான இவர் தனது மேட்டார் சைக்கிலில், உத்திரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் சித்துன்னியா கிராமத்துப் பயணித்துக் கொண்டிருந்தபோது கார் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தினை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அப்பகுதியில் இருந்து தப்பித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.