IPL 2016 35 வது ஆட்டம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் தோனி தலைமையில் புனே சூப்பர் கியண்ட்ஸ் அணி மோதினர்.
‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட்கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, உஸ்மான் கவாஜா தொடக்கத்தில் இருந்து இருவரும் அடித்து ஆடினார்கள். குறிப்பாக கவாஜா அதிரடி ஆட்டம் அடியார்.
இரண்டு ஓவர்களில் 26 ரன்னாக இருந்த போது உஸ்மான் கவாஜா ரன்-அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து சவுரப் திவாரி, ரஹானேவுடன் இணைந்தார். பெங்களூரு அணியின் மோசமான பீல்டிங்கினால் சவுரப் திவாரி இரண்டு முறை கேட்ச்சில் இருந்து தப்பினார். ரஹானே-திவாரி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் புனே அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 11.2 ஓவர்களில் புனே அணி 100 ரன்னை கடந்தது.
485922-ipl8apab08s
ரஹானே-திவாரி ஜோடி 106 ரன்கள் சேர்த்தது. புனே அணி 191 ரன்கள் குவிப்புக்கு இது அடித்தலமாக இருந்தது. அபாரமாக ஆடிய தொடக்க வீரரர் ரெஹானே 74 ரன்கள் எடுத்தார். ஜார்ஜ் பெய்லி மற்றும் டோனி சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆடினார்கள். முதலில் நிதானமாக ஆடிய இருவரும் நான்காவது ஓவரில் தங்களது அதிரடி ஆட்டத்தை ஆடினர். ராகுல் 38 ரன் எடுத்த நிலையில அவுட் ஆனார். அடுத்து டிராவிஸ் ஹெட், விராட்கோலியுடன் இணைந்தார். அதிரடியாக ஆடிய விராட்கோலி IPL இரண்டாவது சதத்தை அடித்தார். 58 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் அபார வெற்றி பெற்றது.