அதிக சர்வதேச போட்டிகள் – 8வது வீரராக பட்டியலில் இணைந்த விராத் கோலி!

--

மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற விராத் கோலி, அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.

அதாவது, அந்த எண்ணிக்கையில் இந்திய அளவில் 8வது வீரராக இடம்பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.

இப்போட்டி கோலியின் 241வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இவர் 84 டெஸ்ட் & 75 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அந்தவகையில், ஒட்டுமொத்தமாக 400 சர்வதேச போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

இதன்மூலம், உலகளவில் 400 சர்வதேச போட்டிகள் என்ற சாதனையை எட்டும் 33வது வீரராகவும், இந்திய அளவில் 8வது வீரராகவும் உருவாகியுள்ளார் கோலி.

அதிக சர்வதேச போட்டிகளை ஆடிய வீரர்கள் வரிசையில், இந்திய அளவில், 664 போட்டிகளுடன் சச்சின் முதலிடத்திலும், 538 போட்டிகளுடன் தோனி இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

ராகுல் டிராவிட், அசாருதீன், கங்குலி, கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங் போன்றோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இப்பட்டியலில் தற்போது 8வது வீரராக இணைந்துள்ளார் கோலி.