ஆக்லாந்து: ‍நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், ஒரு கேட்ச் பிடித்ததன் மூலம், டி-20 அரங்கில் அதிகம் கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார் கேப்டன் விராத் கோலி.

நியூசிலாந்து வீரர் மன்ரோ அடித்தப் பந்தை கேட்ச் செய்தார் கோலி. அது அவரின் 41வது கேட்சாக அமைந்தது. 80 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி இதை செய்துள்ளார்.

முதலிடத்தில் 78 போட்டிகளில் விளையாடி, 42 கேட்ச்களைப் பிடித்த சுரேஷ் ரெய்னா உள்ளார். உலகளவில் முதலிடத்தில் இருப்பவர்,

தென்னாப்பிரிக்காவின் மில்லர். இவர் 72 போட்டிகளில் 50 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.

பவுலர்களைப் பாராட்டிய கேப்டன்

“எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதை நமது பவுலர்கள் சிறப்பாகக் கட்டுப்படுத்தினர். அணிக்கு என்ன தேவையோ, அதை உணர்ந்து செயலாற்றினர் பவுலர்கள். ஜடேஜா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார் கோலி.

அதேசமயம், ஆடுகளம் ரன் குவிப்பிற்கு சிரமமாக இருந்ததாக கூறியுள்ளார் ஆட்ட நாயகன் விருதுபெற்ற கே.எல்.ராகுல்.