பிரித்வி ஷா, கோலி மற்றும் ஜடேஜா சதத்தால் இந்திய அணி 649 ரன்கள் குவிப்பு

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பிரித்வி ஷாவை தொடர்ந்து கோலியும், ரவிந்திர ஜடேஜாவும் சதம் அடித்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு, 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

india2

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அறிமுக வீரராக களமிறங்கிய இளம் பிர்த்வீ ஷா 134 ரன்கள் எடுத்து கைகொடுக்க இந்திய அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் பேட்டிங்க் செய்த கோலி 72 ரன்களிலும், பண்ட் 17 ரன்களிலும் அவுட்டாகாமல் இருந்தனர். இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் கேப்டன் கோலி 139 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 100 ரன்களும் எடுத்து அசத்தினர். ரிஷ்ப் பண்ட் 92 ரஙள் எடுத்த நிலையில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் எடுத்த போது போட்டியை டிக்ளேர் செய்தது.