ஐசிசி ஒருநாள் தரவரிசை – விராத் கோலி, பும்ரா முதலிடம்!

துபாய்: ஐசிசி வெளியிட்ட சிறந்த ஒருநாள் போட்டி பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் கோலியும், சிறந்த பெளலர்களுக்கான தரவரிசையில் பும்ராவும் முதலிடம் பிடித்துள்ளனர்.

சர்வதேச அளவில் ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. பேட்ஸ்மென்களுக்கான பட்டியலில் தனது முதலிடத்தை விராத் கோலி இப்போதும் தக்கவைத்துக் கொண்டார்.

இவர் பெற்ற புள்ளிகள் 886. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி எடுத்தது 183 ரன்கள். அடுத்ததாக, 868 புள்ளிகளுடன் ரோகித் ஷர்மா இரண்டாமிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவர் எடுத்த மொத்த ரன்கள் 171.

மூன்றாமிடம் பெற்றுள்ள பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் பாபர் ஆஸம். அவர் பெற்ற புள்ளிகள் 829.

பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் ஒரு இந்திய வீரர்தான் முதலிடம் பெற்றுள்ளார். அவர் ஜஸ்ட்ப்ரிட் பும்ராதான். அவர் பெற்ற புள்ளிகள் 764.

மேலும், முகமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் முதல் 25 இடங்களைப் பெற்றுள்ளனர். ஜடேஜா இரண்டு இடங்கள் முன்னேறி 27வது இடத்தைப் பிடித்துள்ளார்.