இந்திய கால்பந்து வீரர்களுக்கு வீராட் கோலி ஆதரவு

இந்திய கால்பந்து வீரர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சௌத்ரி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”கால்பந்து போட்டியில் களம் காணும் எனது நண்பனை பார்க்கவும், இந்திய கால்பந்து அணியின் @chetrisunil11’s என்ற இடுக்கையை கவனிக்க முயற்சிக்கவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் சுனில் சௌத்ரி வெளியிட்டுள்ள வீடியோவில், ”மும்பை வந்துள்ள எங்களை அனைவரும் ஆதரிப்பதாகவும், அனைத்து ரசிகர்களும் எங்கள் விளையாட்டை பார்க்கவும்” என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், எங்களை உற்சாகப்படுத்தும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதன் மூலம் உலகம் எங்கள் வசம் உள்ளதாக  சுனில் உற்சாகமாக பேசியுள்ளார். உங்களுக்கு நான் வீடியோ பதிவை மட்டும் செய்யவில்லை, அனைவரும் கால்பந்து ரசிகர்களாக இருக்க முடியாது, எனினும் இரு காரணங்களுக்காக எங்களை நீங்கள் ஆதரிக்கலாம், 1. கால்பந்து உலகின் சிறந்த விளையாட்டு 2. நாங்கள் நமது நாட்டிற்காக விளையாட உள்ளோம் என்று தனது வீடியோவில் சுனில் உருக்கமாக பேசியுள்ளார். இணையத்தில் கருத்துக்களை பகிர்வதை விட மைதானத்திற்கு வந்து எங்களை உற்சாக மூட்டி ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் தனது ரசிகர்களுக்கு சுனில் அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக டிவீட் செய்த கோலி ” நாம் அனைவரும் நமது கால்பந்து வீரர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்துகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி