சர்ச்சையை கிளப்பிய அவுட் : அதிருப்தியில் கோலி

பெர்த்

ற்போது நடந்து வரும் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் சர்ச்சையை கிளப்பும் வகையில் அவுட் அளிக்கப்பட்டதால் கோலி அதிருப்தி அடைந்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் 2 ஆம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிக்கிஸ்ல் அந்த அணி 326 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு களமிறங்கிஅ இந்திய அணி நேற்று ஆட்ட முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய வீரர்கள் விராட் கோலியும் ரஹானேவும் தொடங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் ரஹானே 51 ரன்னில் அவுட் ஆனார். அடுத்டு வந்த் அஹனுமா விகாரியும் கோலியும் நிதானமாக ஆடினர். விராட் கோலி தனது 25ஆவது டெஸ்ட் செஞ்சுரியை நிறைவு செய்தார். அனுமா விகாரி 20 ரன்களில் அவுட் ஆகவே ரிஷப் பந்த் மற்றும் கோலி விளையாடி வந்தனர்.

கம்மின்ஸ் வீசிய ஓவரின் கடைசி பந்து விராட் கோலியின் பேட்டில் பட்டு சென்றது. இதை ஹேஸ் கம்ப் பிடித்தார். ஆனால் இந்த அவுட் விவகாரத்தில் சர்ச்சை எழுந்ததால் மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்யப்பட்டது. பந்து வீச்சை டிவி ரிப்ளேவில் பார்த்த போது பந்து தரையில் பட்ட பிறகே கேச் பிடிக்கபட்டது தெரிய வந்தது. அதனால் பேட்ஸ்மன் சந்தேகத்தின் பலனாக அவுட் ஆக மாட்டார் என எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது நடுவர் கோலி அவுட் என அறிவித்தார்.

இதனால் விராட் கோலி மிகவும் அதிருப்தி அடைந்து கோபமாக வெளியேறினார். ரசிகர்களும் இந்த அவுட்டை எதிர்த்து கோஷமிட்டதால் மைதானம் சிறிது நேரம் பரபரபுடைந்தது.