ஷார்ஜா: பஞ்சாப் அணிக்கு எதிராக 171 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பெங்களூரு அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது பெங்களூரு அணி. துவக்க வீரர் ஆரோன் பின்ச் 20 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் தேவ்தத் 18 ரன்களும் அடிக்க, கேப்டன் கோலியோ 39 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார்.
நடுக்கள வீரர்கள் யாரும் அதிரடி இன்னிங்ஸை ஆடாத நிலையில், பின்களத்தில் இறங்கிய கிறிஸ் மோரிஸ் 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 1 பவுண்டரியுடன் 25 ரன்களை விளாசினார். இசுரு உதானா 5 பந்துகளில் 10 ரன்களை அடிக்க, பெங்களூரு அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததைவிட உயர்ந்தது.
கூடுதல் ரன்களாக 12 கிடைக்க, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி.
பஞ்சாப் அணியின் முருகன் அஸ்வின், 4 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.