மீண்டும் தள்ளிப்போனது ‘கொலையுதிர் காலம்’ படம் ரிலீஸ் தேதி…!

நயன்தாராவின் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பல முறை தள்ளிப்போன படம் ‘கொலையுதிர் காலம்’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டில் ஏற்பட்ட சர்ச்சையால் படத்திற்கு இலவசமாக விளம்பரம் கிடைத்தும் படம் வெளியாகாமலேயே தள்ளி போகிறது.

இந்த நிலையில், நாளை (ஜூலை 26) படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை நயன்தாராவின் படம் வெளியாகாது.